உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறித்து எச்சரித்துள்ளது.
ஈரக்கில் விற்கப்பட்ட அந்த மருந்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகடைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை இருந்தன. இரண்டுமே மனிதர்களுக்குக் கடும் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். குறிப்பாகப் பிள்ளைகளுக்கு அவை மரணத்தைக்கூட விளைவிக்கலாம் என்று கூறப்பட்டது.
இருமல் மருந்தின் பாதுகாப்பு, தரம் குறித்து உற்பத்தி நிறுவனம் உத்தரவாதம் தரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.
உலகளவில் விற்பனையான கலப்பட இருமல் மருந்துகள் குறித்து அண்மைய மாதங்களாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது. கண்காணிக்கப்படும் மருந்துகளில் குறைந்தது 5 மருந்துகள், இந்திய நிறுவனங்கள் தயாரித்தவையாகும்.
கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குறைந்தது 89 சிறுவர்களின் உயிரிழப்புடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் தொடர்புபட்டிருந்தன. இதனை அடுத்து இந்திய நிர்வாகம் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் உரிமத்தை ரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.