சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் திரும்பி செல்வதற்காக நாளை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு தொடருந்து சேவையில் ஈடுபடும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு தொடருந்து, கண்டி தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு 8.30 மணிக்கு புறப்பட உள்ளது என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிறி தலதா மாளிகை யாத்திரைக்காக 18 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு தொடருந்து சேவைகளை கடந்த 24 ஆம் திகதி முதல் நிறுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.