கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பள்ளி வீதியில் ஆட்டோ பஸார் அருகாமையில் மின் ஒழுக்கு காரணமாக வீடு ஒன்றுநேற்றைய தினம் (27) தீ பற்றி சேதகமாகியுள்ளது.
வீட்டு அயலவர்களின் அயராத கூட்டு முயற்சியின் பயனாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
மேலும் கல்முனை மாநகர தீயணைப்பு படை மற்றும் கல்முனை மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மின் துண்டிப்பை ஏற்படுத்தியதுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது
மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.