இந்திய தலைநகர் புதுடெல்லியிலுள்ள குடிசைப் பகுதியில் நேற்றைய தினம் (27) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இரண்டரை வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளே சம்பவத்தில் உயிரிழந்தனர்.

அத்துடன் தீ விபத்தில் 800க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மின் கட்டமைப்புக்கள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பல எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம்? எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
