நுவரெலியாவில் பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவில் அதிகமான தாழ்நிலப் பகுதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன், பிரதான வீதிகள் சில மழை நீரினால் நிரம்பியுள்ளதுடன், நுவரெலியா பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொரு நிலையத்திற்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து சில மணித்தியாலயத்திற்கு மேல் முற்றாக தடைப்பட்டிருந்தது.
இதேவேளை நுவரெலியா – உடபுசல்லாவ, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதிகளின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டது.

மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட், கிளாரண்டன், கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழைக்காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும் அதிக குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.