யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை உருவாக்கும் பாரிய எதிர்பார்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முதலாம் தவணைக் காலம் பூர்த்தியாகும் முன்னதாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் போட்டியொன்றை நடத்த வேண்டும் என்பது தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

எமது தலைமுறையினர் போர் புரிந்ததாகவும் அடுத்த தலைமுறையினருக்கு போர் இல்லாத ஓர் நாட்டை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அரசாங்கம் தராதரம் பாராது குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதிமொழி வழங்கியுள்ளார்.