இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மே 10-16 வரையான திகதிகள் தேசிய வெசாக் வாரமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (29) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் உள்ள சர்வதேச பௌத்த மையத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில் பல்வேறு பௌத்த மத நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து செயல்படுத்துவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த மேலும் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழா மகாநாயக்க தேரர்கள் மற்றும் அகில இலங்கை சாசனரக்ஷக பால மண்டலத்தின் அறிவுறுத்தல்களின்படி நடைபெற உள்ளது.
இந்த வருட வெசாக் விழாவானது “ஹஜெத மித்தே கல்யாண – ஹஜெத புரிசுத்தமே” என்ற கருப்பொருளின் கீழ் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, நல்ல குணங்களைக் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம் என்பதாகும்.