கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிஐடியினர் (CID) தொடர்ந்து 3 நாட்களாக 2004ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள ஆவணங்களை சோதனையிட்டு விசாரணைகளை கடந்த வாரம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனை கடந்த 8ஆம் திகதி அவரது கட்சி காரியாலயத்தில் வைத்து சிஐடி யினர் கைது செய்தனர்
இதனையடுத்து குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் 23,24,25 ஆகிய மூன்று தினங்களாக கொழும்பில் இருந்து வந்த சிஐடி யினர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஒரு சில விரிவுரையாளர்களின் ஆவணங்களை சோதனை செய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதக அவர் குறிப்பிட்டுள்ளார்.