இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர ஐபிஎல் போட்டியின் போது ஒரு அற்புதமான பிடியெடுத்து துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
இந்த பிடியெடுப்பு நேற்றைய (29) போட்டியில் நிகழ்த்தப்பட்டது.

லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார்.
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் கமிந்து மெண்டிஸ் ஒரு சிறப்பான பிடியை எடுத்த நிலையில், சமீரவின் பிடியெடுப்பும் நிகழ்ந்துள்ளது.
இது ஐபிஎல் 2025 இல் இலங்கை வீரர்களின் களத்தடுப்பு திறமையை காட்டியுள்ளது.