மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் இரண்டு தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை (LG Election) முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அந்தவகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை வாக்களிப்பு நிலையமாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிழக்குத் தொகுதி எண் 06 மற்றும் 07க்கான வாக்குச் சாவடிகளாக கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, 1981 ஆம் ஆண்டு 01ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 5 இன் படி, மேற்கண்ட வாக்குச் சாவடியின் சுமூகமான செயற்பாட்டை எளிதாக்குவதற்காக குறித்த திணைக்களம் பொதுப் பணிகளுக்காக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.