ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ( 22) தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 26பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லா தரார் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், “அடுத்த 24 – 36 மணிநேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.