பீடிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் வரை 482 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், பீடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளினால் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நேற்று தெரிவித்தார். இந்த நாட்டில் 23 வீதமான மக்கள் பீடி குடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புறங்களில் சுமார் 4 இலட்சம் பேர் பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, புதிய வரி விதிப்பினால் பீடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாது.
வரி விதிப்புடன் பீடிகள் மூலம் கிடைக்கும் வரி வருமானமும் வேகமாக அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.