கண்டியில் மலைபோலக் குவிந்திருக்கும் குப்பைகளை கொழும்புக்கு எடுத்துச் சென்று அழிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற புத்தரின் புனித தந்த தாது தரிசனத்துக்காக வருகை தந்த யாத்திரிகர்கள், சுமார் 633 தொன் குப்பைகளை கண்டியில் விட்டுச் சென்றுள்ளனர்.
அவற்றை ஒன்று சேகரித்து தற்போதைக்கு கண்டி மாநகர சபையின் குப்பைக் கிடங்கான கொஹாகொட குப்பைக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தளவு பாரிய குப்பையை ஒரேயடியாக கையாள்வது சிரமமமாக இருப்பதன் காரணமாக கொழும்பில் உள்ள குப்பைக் கிடங்குகளுக்கு அதனை அனுப்பி வைக்க கண்டி மாநகர சபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கண்டி மாநகர சபை மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.