பயிர்ச் செய்கைக்கான பசளைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமை காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் பசளை விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றைக் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு மானியமும் வழங்கப்பட்டது.
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போதைக்கு உரமானியம் என்பதை மாற்றி பயிர்ச்செய்கை நிவாரணம் என்ற பேரில் ஒரு தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த நிவாரணக் கொடுப்பனவு கூட இதுவரை 75 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே சிறுபோக பயிர்ச் செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதைக்கு அரசாங்கம் பசளைகளின் விலைகளை குறைந்த பட்சம் ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.