இணையத்தளம் ஊடாக அறிமுகமான வர்த்தகர் ஒருவரிடமிருந்து மூன்று கோடி ரூபாயை மோசடி செய்த இளைஞர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு- தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இணையத்தளம் மூலம் அறிமுகமான காலி, பட்டேபொல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து குறித்த இளைஞர் புதிய வர்த்தகமொன்றை ஆரம்பிக்கும் ஆசை காட்டி மூன்று கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
அதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்றைய தினம் (2) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.