Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த ஜனாதிபதி எம்முடைய கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார்கள்; நாமல் ராஜபக்‌ச

அடுத்த ஜனாதிபதி எம்முடைய கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார்கள்; நாமல் ராஜபக்‌ச

1 year ago
in அரசியல், செய்திகள்

அடுத்த அரசாங்கத்தை உருவாக்க வல்ல பரம்பரையை அணிதிரட்ட ஒன்றிணையுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச அழைப்பு விடுத்துள்ளார்.

“ஏமாற்றத்தை பொறுத்தது போதும் இனி அதிலிருந்து எழுவோம்” எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் நேற்றையதினம் (01) மாலை நுகேகொடையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உழைக்கும் வர்க்கத்தினர் மீது எமக்கு அளப்பெரிய அம்பிக்கை உள்ளது. அவர்களின் ஊடாகவே இந்த நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல எம்முடைய அரசாங்கத்தின் ஆட்சியில் கொண்டு செல்ல முடிந்தது.

எம்முடைய நாட்டில் உற்பத்தி செய்ய கூடிய அனைத்தையும் எம்முடைய நாட்டிலேயே உற்பத்தி செய்து உலக சந்தையில் போட்டியாளர்களாகவேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நோக்கமாக அமைந்தது.

அதன் முதற்கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார்.

அதனை தொடர்ந்து நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டார்.ஆனால் அவற்றை தற்போதைய ஆளும் தரப்பினர் ஊழல் செய்ததாக விமர்சித்தனர். குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

பொய்யுரைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கமாக அநுர அரசாங்கம் மாறியுள்ளது.

உழைக்கும் வர்க்கத்தினரின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அவர்களை மறந்துள்ளது. அதேபோன்று அவர்களின் தொழிற்பாதுகாப்பை உறுதிப்படுத்த மறந்து அவர்களை கைவிட்டுள்ளது.

அதேபோன்று வரிகளை அதிகரித்துள்ளனர்.இதன் காரணமாக உழைக்கும் வர்க்கத்தினர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே எம்முடைய கட்சி உழைத்தது. நாம் பௌத்தர்கள் மாறாக இனவாதிகள் அல்ல. எம்முடைய கட்சி அனைத்து மதங்களின் உரிமையையும் பாதுகாக்கும் கட்சியாகும்.

இளைஞர் யுவதிகளின் புதிய பரம்பரைக்கு ஏற்ற அரசியலை உருவாக்க நாம் தயார்.

எம்மை அரசாங்கம் அதிகம் தாக்குகின்றது. அதற்கு காரணம் எம்மை பார்த்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அஞ்சுகின்றது. காரணம் நாம் கொள்கை அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்து செல்கின்றோம்.

பல வாக்குதிகளை மக்களுக்கு வழங்கிய அரசாங்கம் அவற்றை நிறைவேற்றுவதாக தெரியவில்லை .

மின்கட்டணத்தை தேர்தலுக்கு பின்னர் கூட்டவுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றவேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றோம்.

அடுத்த அரசாங்கத்தை உருவாக்க வல்ல பரம்பரையை அணிதிரட்ட ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எம்முடைய கட்சி நாட்டை சேதப்படுத்தும் கட்சி அல்ல. மாறாக பயங்கரவாத்தை நிறைவுக்கு கொண்டு வந்து ஆசியாவில் விரைவாக அபிவிருத்தி அடையும் நாடாக ஆக்கிய கட்சியே எம்முடைய கட்சி .

அடுத்த ஜனாதிபதி எம்முடைய கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார்கள் என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பு

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.