இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 3,500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு நீர்வாழ் உயிரினங்கள் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய முயன்ற பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் இருவர் 31 மற்றும் 26 வயதுடைய ஆண்கள், 22 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இலங்கைக்கு UL 403 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வருகைத்தந்திருந்தனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நீர்வாழ் உயிரினங்கள், இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அவற்றின் இறக்குமதி சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மாற்று நீர் அமைப்புகளில் இத்தகைய உயிரினங்களை அறிமுகப்படுத்துவது உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்தை சேதப்படுத்தும், நோய்களை பரப்பும் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை சீர்குலைக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சந்தேக நபர்களை எதிர்கால நடவடிக்கைகளுக்காக விலங்கு நோய் கட்டுப்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்கவும், இந்த உயிரினங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.