நபரொருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி 8.5 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால விசாரணைகளின் பின்னரே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆவர்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.