காலி – இமதுவ பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
அக்மீமன பிரதேச சபையின் வருமான அதிகாரியாக பணியாற்றிய ஒருவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உனவடுன்ன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வர்த்தக உரிமம் வழங்குவதற்காக ரூ. 25,000 இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் இலஞ்சம் வாங்கி கொண்டிருந்த போது, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குழுவால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேக நபர் காலி பதில் நீதவான் லலித் பத்திரண முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து மே 09 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.