Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட கிழக்கு உட்பட சில பகுதிகளில் இன்று அதிகரிக்கும் வெப்பநிலை

வட கிழக்கு உட்பட சில பகுதிகளில் இன்று அதிகரிக்கும் வெப்பநிலை

1 year ago
in செய்திகள்

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (06) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமெனவளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக களைப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி தேவையான அளவு நீர் அருந்துமாறும் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதிக வெப்பம் தொடர்பில் சிறார்களும் முதியோரும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
பிரதமர் தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

பிரதமர் தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு