Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமர் தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

பிரதமர் தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

1 year ago
in செய்திகள்

பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்குமாறு PAFFREL தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கோரிக்கையானது, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஆணைக்குழுவின் தவிசாளர் ஆணை ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கு PAFFREL அமைப்பு எழுதியுள்ள கடித்தில், “பிரதமர் ஹரிணி அமரசூரிய மே 03 ஆம் திகதி முதல் அமைதியான காலத்துக்குப் பிறகும் தனது ஆதரவாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபட ஊக்குவிப்பதாகக் கருதக்கூடிய ஒரு கருத்தை வெளியிட்டிருப்பதை நாங்கள் கண்காணித்துள்ளோம்.

பிரதமரின் கருத்து, அவரது ஆதரவாளர்கள் தேர்தல் சட்டத்தை மீற ஊக்குவிக்கும் செயலாகும், அதே நேரத்தில் அவர் சட்டத்தை புறக்கணித்துள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB)முறைப்பாடு அளித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (05) தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வ முறைப்பாட்டை ஒப்படைத்து பிரதமருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரச்சார காலம் 2025 மே 3 ஆம் திகதி (சனிக்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைந்தது. சட்டத்தின்படி இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு கட்சியும் சட்டப்பூர்வமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக்காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்குவேண்டுகோள் விடுத்ததன் மூலம் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை தனது சட்டதிணைக்களத்திற்கு முதலில் அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாங்கள் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுப்போம்என தெரிவித்துள்ள ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க எனினும் முதலில் அந்த கூற்றினை சட்டதிணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் என்ன தெரிவித்தார் என்பதை அறிவது முதலில் அவசியம்இதன் காரணமாக அதனை சட்டபிரிவிடம் சமர்ப்பிக்கவேண்டும்பிரதமரின் கூற்று எந்த வகையில் சட்டத்தை மீறியுள்ளது என்பதை ஆராயவேண்டும்பிரதமரின் அறிக்கையில் தேர்தல்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
Next Post
தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் திடீர் மரணம்

தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் திடீர் மரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு