கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதற்கான செலவினம் 17ஆம் திகதி நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிய வருகின்றது.
நேற்றைய தினம் முல்லைத் தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி. பிரதீபன் தலைமையிலான குழு தொல்பொருள் திணைக் களம், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட குழுவினர் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டனர்.நேற்றைய தினம் முல்லைத் தீவு நீதிவான் நீதிமன்றில் மனிப் புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதைப் போன்று மனிதப்புதைகுழியை பார்வை யிடுவதற்காக ஏற்கனவே அழைக்கப்பட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி வாசுதேவா மற்றும் திணைக்களத்தினர் சமுகமளித்திருந்தனர்.
இதன்போது தொல்பொருள் திணைக்களம் மதிப்பீடு செய்த செலவினத் தொகை தொடர்பான திட்ட மதிப்பு ஒரு வாரத்துக்குள் – எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணியை மேற் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. எனினும், இந்தத் திகதி எதிர்வரும் 17ஆம் திகதி செலவின திட்டமதிப்பு நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும்போது உறுதிப்படுத்தப்படும் – என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்து வந்த பாதை!ஜூன் 29 – நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தண்ணீர் குழாய்களை புதைப்பதற்காக கிடங்கு வெட்டிய போது மனித எலும்புக்கூடுகள் மற்றும் உடைகள் மீட்கப்பட்டன. ஜூலை 06 – ச முல்லைத்தீவு நீதி வான் முன்னிலையில் புதைகுழி தோண்டப்பட்டது. 13 பேரின் மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டன.ஜூலை 13 – புதைகுழியை தோண்டுவது தொடர்பில் நீதிமன்றில் விசேட
கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், ஜூலை 20இல் புதைகுழியை தோண்ட முடிவு செய்யப்பட்டது.
ஜூலை 20 – நிதி இல்லாததால் புதை குழியை தோண்டுவதை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.ஜூலை 28 – புதைகுழியை தோண்டவும் சர்வதேச கண்காணிப்பை கோரி வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலும் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
ஓகஸ்ட் 08 – புதைகுழியை தோண்ட ஜனாதிபதி பணிமனை நிதி வழங்கும் என்று காணாமல் போனோர் அலுவலகம் நீதிமன்றுக்கு அறிவித்தது.