பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் தி. மு. கவினரின் குரலைக் கேட்டால், பா. ஜ. க.
அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கருணாநிதியின் வார்ப்புகள் அப்படி” என்று தி. மு. க. தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலை வரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்தக் கடிதத்தில், “இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கருணாநிதியால் கட்டிக் காக்கப்பட்ட தி.மு. கவின்பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள்.
நாட்டின் பிரதமர், தான் கலந்து கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் தி. மு. க. மீது தேவையின்றி விமர்சனம் வைக் கின்றார். பாராளுமன்றத்தில் பாஜக அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் இளம்தலைவர் ராகுல் காந்தி.மணிப்பூர், ஹரியானவில் நடக்கும் கொடூரங்கள் குறித்த அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஒன்றிய பா. ஜ. க. அரசின் அமைச்சர் ஸ்மிருதி இரானி, தன் பேச்சில் தி. மு. க. மீது அவதூறு சுமத்தி,திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார்.
பா. ஜ. க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா. ஜ. கவின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப் பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி. பி. ஐ, வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பாஜக அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. பாராளு மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, “எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்” என்ற வகையில் பேசிய அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது.
தி. மு. க. இத்தகைய மிரட்டல் களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. மக்களவையில் கட்சியின் பொருளாளர் டி. ஆர். பாலுவும், மாநிலங்களவையில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவும் ஒன்றிய பா. ஜ. க. அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசியிருக்கிறார்கள் – என்றும் கூறியுள்ளார்.