மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் உட் புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்றை இன்று (7) அதிகாலையில் பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.
அண்மை காலமாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக குடிமனைப் பகுதிகளில் முதலைகள் உட்புகுந்து வரும் நடவடிக்கை அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


