பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதியில் ஆயுததாரிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் சமரசத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தொடந்து தெரிவிக்கையில்,
“கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இருப்பினும், நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.
இந்தியா பின்வாங்குவதை தேர்வு செய்தால், இந்தப் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்.” என்று தெரிவித்தார்.