அரசியல் அமைப்புச் சபையின் செயலாளர் தம்மிக்க தசாநாயக்க பதவி விலகுவதாக அறிவிதுள்ளார்.
தசாநாயக்க நாடாளுமன்றின் முன்னாள் செயலாளர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட் காரணங்களுக்காக தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதியுடன் அரசியல் அமைப்புச் சபையின் செயலாளர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பதவி விலகல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023ம் ஆண்டு தம்மிக்க தசாநாயக்க நாடாளுமன்ற பொதுச் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் அரசியல் அமைப்புச் சபையின் செயலாளராக தம்மிக்க தநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பதவியினை வகிப்பதற்காக மாதாந்த கொடுப்பனவாக ஐந்து லட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நல்லாட்சியை நிறுவும் நோக்கில் அரசியல் அமைப்புச் சபை நிறுவப்பட்டது.
பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட முக்கிய பதவி நிலைகளுக்கான நியமனங்களை அனுமதிப்பது இந்த சபையினாலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.