இலங்கை இராணுவத்தின் விசேட படையணியினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாதுரு ஓயா பயிற்சிப் பாடசாலையின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விமான விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலனை விசாரிப்பதற்காவே, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார் .

அத்துடன் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு தேவையான மேலதிக சிகிச்சைகள் குறித்தும் வைத்தியசாலை அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.