உலகளவில் மே 11 ஆம் திகதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள ஷேன் (Shane) பாலர் பாடசாலையில் கடந்த 09.05 அன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
முன்பள்ளியின் அதிபர் திருமதி டிலினி குஷாந்த் (Dilini Kushanth) தலைமையில் குறித்த இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வினை மேலும் சிறப்பிக்கும் முகமாக வலய கல்வி அலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி அணுரேகா விவேகானந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.
இதன் போது பிள்ளைகளின் அன்னையர் தின கலை நிகழ்ச்சிகளும், அன்னையர்களுக்கான வினோதஉடை நடைபவனியும், அன்னையர்களுக்கான விளையாட்டுகளும் நடைபெற்றதுடன், ஷேன் பாலகர்கள் தங்களது அன்னையர்களை கௌரவித்து, வாழ்த்து மடல் வழங்கி தமது அன்பை பரிமாறிக்கொண்டனர்.
அதேசமயம் அதிதி திருமதி அனு ரேகா விவேகானந்தன் அவர்களும் அன்னையர்களுக்கு சிறப்புரை ஆற்றி முன்பள்ளியின் அதிபரினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



































