மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் சித்திரை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.
மாணவர் மனங்களில் குறித்த தமிழர் பாரம்பரிய கலாச்சாரம் தொடர்பான நிகழ்வு எடுத்துச் செல்லப்படும் பொருட்டு இது ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இனிப்புப் பண்டங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அதேசமயம் குறித்த நிகழ்வில் மாணவர்கள் ,பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






