Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனப்படுகொலையை இல்லையென்பது இனவாதத்தின் வெளிப்பாடே; சிறீதரன் எம்.பி.

இனப்படுகொலையை இல்லையென்பது இனவாதத்தின் வெளிப்பாடே; சிறீதரன் எம்.பி.

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்க்கிறார்கள்.

காலங்காலமாக எங்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் கறைபடிந்த வரலாற்றின் நாளான குமுதினிப் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தலில், வலிசுமந்த நெடுந்தீவு மண்ணிலிருந்து, கனேடியப் பிரதமருக்கும் பிரம்டன் நகர மேயருக்கும் எனது நன்றிகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (15) நெடுந்தீவில் நடைபெற்ற குமுதினிப் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

குமுதினிப் படகில், குருநகர் கடலில், கொக்கட்டிச்சோலையில், சத்துருக்கொண்டானில், வாகரையில், நவாலியில், நாகர்கோயிலில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை கொத்துக்கொத்தாக எங்களை கொன்றொழித்துவிட்டு, ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறவே இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், நாமல் ராஜபக்சவும், அலி சப்ரியும் தெரிவித்துள்ள கருத்துகள் உலகத்தின் மனசாட்சியை உலுக்கத்தக்க, சிங்கள வல்லாதிக்க வெளிப்பாட்டுக்குரியவை.

அத்தகைய கருத்துகளை முன்வைத்தோர்க்கு எதிராக நான் எனது வன்மையான கண்டனங்களைப் பதிவுசெய்கிறேன்.

இத்தகைய இனவாதம் கொப்பளிக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான சர்வதேச சாட்சியமாக, பிரம்டனில் இனப்படுகொலை நினைவுத்தூபியை நிறுவிய கனேடிய பிரதமர் மாண்புமிகு மார்க் ஹனி, பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண் ஆகியோரோடு, இதற்கு காரணமான அனைவருக்கும் எமது நன்றிகள். என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
பதுளையில் கைப்பற்றப்பட்ட ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்

பதுளையில் கைப்பற்றப்பட்ட ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு