Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்

அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்

8 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடமத்திய , வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மாத்தறை தொடக்கம் கொழும்பு, மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

களுத்துறை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 – 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.எனவே மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சிரிக்கை விடுத்துள்ளது

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வவுனியாவில் மின்வயரின் மீது முறிந்து வீழ்ந்த மரம்!
செய்திகள்

வவுனியாவில் மின்வயரின் மீது முறிந்து வீழ்ந்த மரம்!

May 17, 2025
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு
செய்திகள்

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

May 17, 2025
இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை
செய்திகள்

இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை

May 17, 2025
காங்கேசன்துறையில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
செய்திகள்

காங்கேசன்துறையில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

May 17, 2025
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் வழங்கி வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் வழங்கி வைப்பு

May 17, 2025
கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு
செய்திகள்

கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு

May 17, 2025
Next Post
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.