மே-18 தமிழின படுகொலை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, அதை ஒடியதான நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்ற அதேவேளை தங்களது உறவுகளை இழந்த குடும்பத்தினர் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தி வருகின்ற இந்த நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டிருக்கின்றார்.
அந்த பதிவில் பின்வருமாறு கூறுகின்றார்,
நீண்ட ஆண்டுகளாகத் தொடர்ந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நம் தாய்நாட்டில் அமைதியை நிலைநாட்டிய அனைத்து வீரர்களின் தியாகத்தையும், அவர்கள் காட்டிய துணிவையும் இன்று நாம் மகிழ்வுடன் நினைவுகூருகிறோம்.

உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில், அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு மனிதாபிமானப் பணியை இலங்கை முன்னெடுத்தது.
இந்த வரலாற்றுப் பொன்னான தருணத்தை நாம் சிந்திக்கும்போது, போர் காலத்தில் சகிப்புத்தன்மையுடன் துன்பங்களை எதிர்கொண்ட அனைவருக்கும் மரியாதை செலுத்துவது முக்கியமான ஒன்று. இந்த நிகழ்வுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும். எனவே, நம் தாய்நாட்டின் சுயாதீனத்தையும், நீதியையும் பாதுகாத்து, அனைத்து சமூகவாசிகளுக்கும் நிலையான அமைதி மற்றும் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப நாம் ஒன்றுபட்டு முன்னேற வேண்டும் என நம்புகிறேன்.