தமிழரசு கட்சியின் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் மே-18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று (18) வாழைச்சேனை பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
நிகழ்வில் பஸ் தரிப்பிடத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் உயிர் நீத்த உறவகளுக்காக விசேட பூசை நடைபெற்று, பொதுச் சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் அங்சலி செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு முள்ளி வாய்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இன,மத பேதமின்றி வீதியால் சென்ற பொதுமக்கள் அதனை அருந்தினார்கள்.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டு நினைவுப் பேருரையாற்றினார்.அதேசமயம் பிரதேச சபை உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.