மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் ஒரு ஆணும், கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.
நேற்று (20) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மிகுந்த முயற்சியுடன் அவர்களை மீட்டு, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

இவ்வாறு அடித்து செல்லப்பட்டவர்கள் இருவரும் பங்களதேஷை சேர்ந்தவர்31 வயதுiடயவரும், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 20 வயதுடையவருமாவர்.