நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை இன்றையதினம் (22) யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
இந்நநிலையிலேயே இன்றையதினம் யாழ் மாநகரசபையினர் குறித்த விளம்பரப் பதாகையை அகற்றியுள்ளனர்.
