திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் பகுதியில் துறைமுக அதிகார சபையினர் உள் நுழைந்தததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்றையதினம் (22) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இன்று காலை மக்கள் காணிகளை கையகப்படுத்த முனைவது தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.









