Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாணக்கியனால் கொண்டுவரப்படும் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்; சுமந்திரன்

சாணக்கியனால் கொண்டுவரப்படும் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்; சுமந்திரன்

7 hours ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு மட்டத்தில் முன்னெடுத்துவருதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்திருக்கும் நிலையில், மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் கொண்டுவரப்படும் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு வியாழக்கிழமை (22) வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனை விரைவாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் மாகாணசபைகள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன வெள்ளிக்கிழமை (23) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட சுமந்திரன், மாகாணசபைத்தேர்தல் சட்டத்தில் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தை நீக்கி, மாகாணசபைத்தேர்தலை மீண்டும் பழைய முறைமையிலேயே நடத்துவதற்கு ஏதுவாக தான் 2019 ஆம் ஆண்டிலும், பின்னர் 2023 ஆம் ஆண்டிலும் கொண்டுவந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை எனவும், அச்சட்டமூலமே தற்போது சாணக்கியனால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டில் அத்தனிநபர் சட்டமூலத்தை முன்வைத்து சில நாட்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும், 2023 ஆம் ஆண்டில் அச்சட்டமூலத்தை மூன்றாம் வாசிப்புக்கு எடுக்கவேண்டியிருந்த நிலையில், அது நிகழ்ச்சிநிரலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அரசாங்கமும் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு மட்டத்தில் முன்னெடுத்துவருதாக அமைச்சர் சந்தன அபேரத்ன கூறியிருக்கும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கினால் கொண்டுவரப்படும் இத்தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மாகாணசபைத்தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும் எனவும், இனியும் காலதாமதம் செய்யப்படக்கூடாது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணக் கொள்வனவிற்கான உதவித்தொகை அதிகரிப்பு
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணக் கொள்வனவிற்கான உதவித்தொகை அதிகரிப்பு

May 25, 2025
மட்டு நகரில் சைக்கிள் திருடன் கைது; இரண்டு சைக்கிள்கள் மீட்பு
செய்திகள்

மட்டு நகரில் சைக்கிள் திருடன் கைது; இரண்டு சைக்கிள்கள் மீட்பு

May 25, 2025
கடல் கொந்தளிப்பு காரணமாக மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு காரணமாக மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

May 25, 2025
தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை தமிழ் ராஜபக்ஸர்கள் என்று வர்ணிக்கும் ஆளும் தரப்பு
செய்திகள்

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை தமிழ் ராஜபக்ஸர்கள் என்று வர்ணிக்கும் ஆளும் தரப்பு

May 25, 2025
ஒபாமவின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடிவிட்டது; டொனால்ட் ட்ரம்ப்
உலக செய்திகள்

ஒபாமவின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடிவிட்டது; டொனால்ட் ட்ரம்ப்

May 25, 2025
தங்க முலாம் துப்பாக்கி விவகாரத்தில் கைதான துமிந்த திசாநாயக்க வைத்தியசாலையில்
செய்திகள்

தங்க முலாம் துப்பாக்கி விவகாரத்தில் கைதான துமிந்த திசாநாயக்க வைத்தியசாலையில்

May 25, 2025
Next Post
கடல் கொந்தளிப்பு காரணமாக மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு காரணமாக மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு