Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடல் கொந்தளிப்பு காரணமாக மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு காரணமாக மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் ஏற்படவுள்ள கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று (25) பிற்பகல் ஒரு விசேட அறிக்கையை வெளியிட்ட திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் கடல் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரை பிராந்தியங்களில் உள்ள கடல் பகுதிகளில் சுமார் 2.5 – 3.0 மீற்றர் வரை கடல் அலைகள் உயரக்கூடும்.

இதன் காரணமாக, மன்னார் முதல் புத்தளம் வரை, கொழும்பு வழியாக காலி வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து கொழும்பு வழியாக மாத்தறைக்கும் காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
மட்டு நகரில் சைக்கிள் திருடன் கைது; இரண்டு சைக்கிள்கள் மீட்பு

மட்டு நகரில் சைக்கிள் திருடன் கைது; இரண்டு சைக்கிள்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு