2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்க முடியாத பரீட்சார்த்திகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள் திணைக்களம் மீளாய்வு விண்ணப்ப காலத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2025 மே 28 முதல் 30 வரை ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
