
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகள் என தென்னை வேளாண்மை சபை தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து அறுவடை குறைந்த போதிலும், விலைகள் ரூ.200க்கு மேல் உள்ளன.
உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் பயன்படுத்தப்படாத அரசு தோட்டங்களைப் பயன்படுத்தும் அதே வேளையில், சதோச மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் சலுகை விலையில் தேங்காய்களை விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விலைகளை உறுதிப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் அறுவடை மீண்டும் குறையக்கூடும் என்றும், இது மற்றொரு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் ஜெயக்கொடி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
