
பிற நாடுகளின் வழக்கு தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துவதற்காக 2024 ஆண்டின் 49 ஆம் இலக்க வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டு, 2025-03-28 திகதிய 2429/51 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் மூலம் அவ்வாறான வழக்கு தீர்ப்புகளை அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய வெளிநாடுகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மேற்குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
