குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளரை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

துபாயில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுக்கு போலி கடவுச்சீட்டுகளை தயாரித்த குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
