Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக்கட்சி தவிசாளர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்

போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக்கட்சி தவிசாளர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்

1 year ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளராக விமலநாதன் மதிமேனன் நேற்று (02) ஆம் திகதி காலை பதவியேற்றார்.

இவர் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான உள்ளுராட்சி தேர்தலில் மண்டூர் வட்டாரத்தில் போட்டியிட்டு 1101 வாக்குகளை பெற்றுள்ளார்.

போரதீவுப்பற்று உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சியினர் போட்டியிட்டு 50 வீதமான வாக்குகளைப்பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், தவிசாளராக வி.மதிமேனனும், துணை தவிசாளராக பாலையடிவட்டை வட்டாரத்தில் தெரிவான தங்கராசா-கஜசீலன் தெரிவு செய்யப்பட்டு வர்த்தமானி நேற்றையதினம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக நேற்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றார்கள்.

இப்பதவியேற்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீ.நேசன், இரா.சணாக்கியன்,வைத்தியர் இ.ஸ்ரீநாத், தமிழரசுக்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள்,பிரதேச சபைச்செயலாளர் எஸ்.பகீரதன் ஆகியோர்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் விசேடமாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டார்.

10 வட்டாரங்களைக் கொண்ட போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் பட்டியல்வேட்பாளர்கள் அடங்களாக 16 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலும், 5 உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பிலும், 3 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேசமயம் விமலநாதன் மதிமேனன் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணாக்கியினின் செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
Next Post
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு