ஹல்துமுல்ல, சொரகுனேபிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்குள் புகுந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்
ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ வீரர் ஒருவர், திங்கட்கிழமை
(14) கைது செய்யப்பட்டதாகஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் பாடசாலையின் பழைய மாணவர் எனவும் சந்தேக நபர் புனானி இராணுவ முகாமில் பணிபுரியும் பொறியியலாளர் படைப்பிரிவின் சிப்பாய் என பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலையின் சங்கீத அறையை உடைத்து மல்டிமீடியா இயந்திரம், புளூடூத் உபகரணங்கள் மற்றும் சீடி பிளேயர் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய சந்தேகத்திற்கிடமான இந்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.திருடப்பட்ட மல்டிமீடியா இயந்திரத்தை 25,000 ரூபாய்க்கு தியத்தலாவ பிரதேசத்தில் விற்று, சந்தேக நபர் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சிடிப்ளேயரை நண்பருக்கு வழங்கியதாகவும், புளூடூத் ஸ்பீக்கர் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பானபொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபானவின்ஆலோசனையின் பேரில், ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அசங்க சுரவீர உள்ளிட்ட குழுவினர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.