Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கொலை செய்ய சதி!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கொலை செய்ய சதி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ஹேமசிறி, ஒக்டோபர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தனது பாதுகாப்புப் படையின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 30 ஆக குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

மற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முறையே 243 மற்றும் 200 மற்றும் 109 பாதுகாப்பு குழுக்கள் வழங்கப்படுவதாகவும் தமக்கு மாத்திரம் 30 மெய்ப்பாதுகாவலர்களை வழங்க எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்பது புரியாக புதிராகவே இருப்பதாக கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தாம் ஓய்வு பெற்றாலும் தன்னைக் கொன்று விடுவோம் என பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதாக காவல்துறை புலனாய்வு அறிக்கைகள் மூலம் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் 63 இராணுவத்தினர் மற்றும் 180 காவல்துறையினர் அடங்கிய 243 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் மைத்திரிபால சிறிசேனவிடம் 109 காவல்துறையினரும், கோட்டாபய ராஜபக்சவிடம் 25 காவல்துறையினரும் 175 இராணுவத்தினருடன் 200 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உள்ளனர், ஆனால் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 50 இல் இருந்து 30 வரை குறைப்படுவதை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 9, 2026
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
Next Post
வாக்குச்சாவடிகளாக விகாரைகள்

வாக்குச்சாவடிகளாக விகாரைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.