Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த நடவடிக்கை முறையாக இடம் பெறுகின்றதா என்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் கடந்த (06) பிற்பகல் 2.30 மணியளவில் மட்டக்களப்பு பிராந்தியசுகாதார சேவை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளில் அண்மையில் உணவு ஒவ்வாமையினால் 70 பாடசாலை மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் தெளிவூட்டுவதற்காக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ.உதயகுமாரின் ஏற்பாட்டில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பாடசாலைகளுக்கு உணவு வழங்குதலில் பிளாஸ்டிக் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு அருகாமையில் இருப்பவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என வலியுத்தப்பட்டுள்ளது.

உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு கொண்டு வந்து வழங்க முன்பு, அதனை பாடசாலை உணவுக்குழு கட்டாயம் கண்காணிக்க வேண்டும் எனவும் இதனை பொதுசுகாதார பரிசோதகர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு தயாரிக்கும் ஒருவர் ஒரு பாடசாலைக்கு மாத்திரமே உணவு வழங்குதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதுடன் 200 மாணவர்களுக்கு மாத்திரமே அவை வழங்க வேண்டும் எனவும் இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சாமினி ரவிராஜ், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உணவு தயாரித்து வழங்குனர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், சுகாதார சேவை திணைக்கள உயர் அதிகாரிகள் என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
Next Post
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு