நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் உரிய முறையில் சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சம்பளத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள போராட்டக்காரர்கள், அதற்கு உரிய தீர்வுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சுமார் ஐந்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடலுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.