Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை – கியூபா இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வு!

இலங்கை – கியூபா இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வு!

3 years ago
in செய்திகள்

இலங்கை – கியூபா இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வு இலங்கை மற்றும் கியூபா இரு நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து அண்மையில் (09) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

நட்புறவுச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது இலங்கைக்கான கியூபா தூதுவர்
அண்ட்ரஸ் மார்செலோ கரிடோவும் (Andres Marcelo Garrido) கலந்துகொண்டார்.

இலங்கை மற்றும் கியூபா என்பன நீண்ட காலமாக எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து சர்வதேச ரீதியில் நட்பு நாடாக இருந்து வருவதுடன் இந்தப் போக்கு அதிகரிக்கப்பட வேண்டும் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண இதன்போது குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை – கியூபா நட்புறவு அமைப்புகளை ஆரம்பிப்பதன் மூலம் கியூபா பற்றி இலங்கை மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, தமது பகுதிகளில் இலங்கை – கியூபா நட்புறவு அமைப்புகளை
ஆரம்பிப்பதற்கு முன்வருமாறு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்செலோ கரிடோ குறிப்பிடுகையில், கியூபா பாராளுமன்றத்தில் அண்மையில் கியூபா – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அங்கத்தவர்கள் இரு நாடுகளுக்குமிடையில் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், கியூபா முகங்கொடுத்த பல்வேறு சவால்களின் போது இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்தார். அதேபோன்று இரு நாடுகளுக்குமிடையில் விளையாட்டு மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் நவம்பர் மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஹவானா சர்வதேச சந்தையில் இலங்கை வர்தகர்களையும் கலந்துகொள்ளுமாறு கியூபா தூதுவர் அழைப்பு விடுத்தார்.

இங்கு உரையாற்றிய இராஜங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் குறிப்பிடுகையில், கியூபா அரசுடன் இணைந்து இலங்கையில் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்ததுடன், இதற்கான எனக்கருப்பத்திரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நட்புறவுச்சங்கத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் நட்புறவுச்சங்கத்தின் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான கௌரவ ஜயந்த வீரசிங்க மற்றும் இசுறு தொடங்கொட ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
Next Post
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தத் திருவிழாவினை முன்னிட்டு Battinaatham ஊடகத்தினால் தாகசாந்தி மற்றும் அன்னதானம் வழங்கி வைப்பு!

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தத் திருவிழாவினை முன்னிட்டு Battinaatham ஊடகத்தினால் தாகசாந்தி மற்றும் அன்னதானம் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு