எதிர்காலத்தில் அதிக மணிநேரம் பணியாற்றுவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் தயாராக வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (16) தெரிவித்தார்.
ஏழு மணித்தியாலங்களை உறக்கத்தில் செலவிடுவதைத் தவிர ஏனைய நாட்களை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அதிகாரிகளும் இதுபோன்ற தியாகங்களைச் செய்ய வேண்டும், இல்லையெனில் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தில் வெற்றி பெற முடியாது என்றார்.
அதிகாரிகள் சுயமாக சிந்தித்து பணியில் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும் என்றும், நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இது முக்கிய முடிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் எழுத்தறிவை அதிகரிப்பதற்காக கல்வித் துறை அதிகாரிகளுக்கு கல்வியமைச்சு மற்றும் யுனிசெப் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர் ஆலோசகர்களை விட இருமடங்காக நியமிக்கப்படவுள்ளதாகவும், 7,000 அதிபர்கள் நிரப்பப்படவுள்ளதாகவும், ஆரம்ப மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும், அடுத்த வருடம் புலமைப்பரிசில்கள், பொதுத் தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் 3000 பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் மேலும் சில பாடசாலைகளை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்துடன் உள்ளடக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மற்றும் மாகாண கல்வித் துறையில் பல்வேறு பதவிகளை வகிக்கும் பெருமளவான அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.