வாட்ஸ்அப் செயலியில் விரைவில் விளம்பரங்கள் மற்றும் சந்தா கட்டண சேவைகள் அறிமுகமாக உள்ளன. இந்த மாற்றங்கள், மெட்டா நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்படுகின்றன. வாட்ஸ்அப்பில் தற்போது மக்கள் அதிகம் பயன்படுத்தும் “ஸ்டேட்டஸ்” பகுதியிலேயே முதலில் விளம்பரங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி இடையே வரும் விளம்பரங்களைப் போல காணப்படும்.
பயனர்கள் பகிரும் புகைப்படம், வீடியோ அல்லது உரைக்கு இடையே, முழுத்திரை விளம்பரங்கள் காட்டப்படும். மேலும், இந்த விளம்பரங்கள் பயனரின் வயது, இருப்பிடம் மற்றும் செயலி பயன்படுத்தும் விதத்தைக் கொண்டு தனிப்பயனாக்கப்படும். இதற்காக மெட்டா நிறுவனம் தொழில்நுட்ப அடிப்படையில் மிகச்சிறந்த தனிப்பட்ட அனுபவத்தை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. மக்கள் அனுபவத்திற்கு இடையூறாக இல்லாமல் இந்த அம்சம் வடிவமைக்கப்படும் எனவும் மெட்டா உறுதியளித்துள்ளது.

இதேநேரம், வாட்ஸ்அப் செயலியில் “Channel Subscription” என்ற புதிய சந்தா வசதியும் அறிமுகமாகும். இதன் மூலம், சில முக்கியமான நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது ‘Channel’-களில் பிரீமியம் உள்ளடக்கங்களை வழங்க முடியும். பயனர்கள் மாதாந்த கட்டணத்துடன் இந்த சேவைகளை சந்தா எடுத்து பயன்படுத்த முடியும். இது சாதாரண செய்தி சேனல்களுக்கான புதிய வருமான வழியாகும்.
மேலும், வாட்ஸ்அப்பில் “Promoted Channels” என்ற வசதியும் கொண்டு வரப்படுகிறது. இந்த வசதி மூலம் வணிக நிறுவனங்கள் தங்கள் சேனல்களை விளம்பரமாக நிர்வகிக்க முடியும். இந்த வகை சேனல்களுக்கு நிறுவனம் வழிகாட்டும் கட்டண வசதிகளை வசூலிக்கலாம். Meta Verified அல்லது WhatsApp Business Premium போன்ற சேவைகளுக்கான கட்டணங்கள் $10 முதல் $20 வரை இருக்கலாம்.
மொத்தமாக, WhatsApp Business API சேவைகளுக்கும் கூடுதல் கட்டண அமைப்புகள் கொண்டு வரப்படும். வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் நிறுவனங்கள், template message-க்கள் மற்றும் marketing message-க்களுக்கு தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த மாற்றங்கள் 2025 ஜூலை முதல் அமலுக்கு வரவிருக்கின்றன. இதன் மூலம் வாட்ஸ்அப் ஒரு இலவச மெசேஜிங் செயலியிலிருந்து, வருமானம் பெருக்கும் தொழில்நுட்ப தளமாக மாறுகிறது என்பது குறிப்பிடப்படவேண்டி உள்ளது.
